×

தீபாவளியை முன்னிட்டு 10 ஆயிரம் செம்மறி ஆடுகள் விற்பனை

 

கரூர், நவ. 19: தீபாவளியை முன்னிட்டு 10 ஆயிரத்துக்கும் அதிமாக செம்மறியாடுகள் விற்பனையானது. ஆதிகாலத்தில் இருந்தே மனிதர்கள் மாமிசத்தை விரும்பி உண்ணும் பழக்கம் இருந்துள்ளது. முதல் முதலாக மனிதன் விலங்குகளை வேட்டையாடி உண்டான். திருவிழா மற்றும் பண்டிகை நாட்களில் தமிழக மக்களிடம் மாமிசம் உண்ணும் பழக்கம் அதிகரித்துவருகிறது. குறிப்பாக வெள்ளாடு, செம்மறி ஆடு, கோழி ,கௌதாரி, மாடு, பன்றி ஆகியவற்றை வளர்த்து வணிக ரீதியாக விற்பனை செய்வதுடன் தனக்கு தேவையான உணவுகளை தாங்களே தயார் செய்து கொள்ளும் அளவிற்கு மேற்கூறிய கால்நடைகளை உண்ணும் பழக்கம் அதிகரித்து வருகிறது.

ஒரு சில ஊர்களில் ஒரு வளர்ந்த பெரிய ஆடுகளை 10 நபர் அல்லது 5 பேர் தனியாக வாங்கி அதனை தேவையான அளவு மாமிசத்தை பகிர்ந்து கொள்கின்றனர். மேலும் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கரூர், வெங்கமேடு, இனாம், கரூர், குளத்துப்பாளையம், வாங்கபாளையம், காந்திகிராமம், பசுபதிபாளையம், ராயனூர், தான்தோன்றி மலை, வெங்கங்கல்பட்டி கோடங்கிபட்டி வேலுச்சாமிபுரம், கௌரிபுரம் ராமகிருஷ்ணபுரம் மற்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான தற்காலிக மாமிசகடைகள் தீபாவளியை முன்னிட்டு திறக்கப்பட்டு அமோகமாக மாமிசம் விற்பனையானது.

மேலும் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு வரை பெரும் பாலும் இறைச்சி கடைகளில் வெள்ளாடுகளே விரும்பி உண்ணும் பழக்கம் நடைமுறையில் இருந்துவந்தது. கரூர் பகுதியில் முன்னிட்டு வெள்ளாடுக்கு இணையாக பத்தாயிரம் செம்பரி ஆடுகள் வரை விற்பனை ஆகி உள்ளது என்று உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். செம்மறி ஆடு ஒரு கிலோ ரூ.700 முதல் ரூ.800 வரை விற்பனையானது.

The post தீபாவளியை முன்னிட்டு 10 ஆயிரம் செம்மறி ஆடுகள் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Diwali ,Karur ,Dinakaran ,
× RELATED கரூர் சுங்ககேட் அருகே அடையாளம் தெரியாத நபர் மயங்கி விழுந்து சாவு